நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவி பிரிந்து சென்றதால் பொதுப்பணித்துறை ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் உத்திரவாகினிப்பேட் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கலைமாறன், 34; பொதுப்பணித்துறை டேங்க் ஆப்ரேட்டர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார்.
இதனை மனைவி மகாலட்சுமி கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மகாலட்சுமி திருபுவனையில் உள்ள தாய் வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்று, 8 மாதங்களாக தங்கியுள்ளார்.
மனைவி பிரிந்து சென்றதில் இருந்து மன வேதனையில் இருந்த கலைமாறன் நேற்று வி.தட்டாஞ்சாவடியில் உள்ள வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.