/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்கள் 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அரசு ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

ADDED : ஏப் 05, 2025 04:20 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன செயல் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த 2015ம் ஆண்டு பி.ஆர்.டி.சி., கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக சொற்ப ஊதியத்தில் பணி செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட கால மாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 2025 பொங்கல் பண்டிகைக்குள் பணி நிரந்தரம் செய்வதாக இயக்குனர் உறுதி அளித்தார். ஆனால் நான்கு மாதங்கள் கடந்தும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதனால், பி.ஆர்.டி.சி., அனைத்து ஒப்பந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஒன்றிணைந்து வரும் 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
பேட்டியின்போது சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் வேலய்யன், கவுரவத் தலைவர் பிரேமதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.