/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 28, 2025 04:41 AM
புதுச்சேரி: அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று காலை 10:00 மணியளவில், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பொதுப்பணித்துறையில், கடந்த 14 ஆண்டுகளாக பணி புரியும் வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்வேறு அரசு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் வவுச்சர் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும்.
அடையாள அட்டை, பி.எப்., - இ.எஸ்.ஐ., உள்ளிட்ட அரசு நல சலுகைகள் வழங்க வேண்டும். பொதுப்பணித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை, வவுச்சர் ஊழியர்களை கொண்டு ஆவணம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

