தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுக்கடை மூட அரசாணை வெளியீடு

 மதுக்கடை மூட அரசாணை வெளியீடு

 மதுக்கடை மூட அரசாணை வெளியீடு


ADDED : ஏப் 15, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதிவரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே எளிதில் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தேர்தல் துறைக்கு ஆதரவளிக்கவும், தமிழக தேர்தல் செயல்முறையில் நேர்மையை நிலை நிறுத்த, புதுச்சேரி மாநிலத்திற்குள் மதுவிலக்கு நாட்களை அமல்படுத்துவது அவசியமாகி உள்ளது.

அதனையொட்டி வரும் 21ம் காலை 10 மணி முதல் வரும் 23ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை அனைத்து மதுக்கடைகளை மூட கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us