/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடு நீக்கி அரசாணை
/
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடு நீக்கி அரசாணை
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடு நீக்கி அரசாணை
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடு நீக்கி அரசாணை
ADDED : ஆக 27, 2025 07:01 AM

புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் பணியாற்றும் பணி ஆய்வாளர்கள், பல்நோக்கு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடு நீக்கல் அரசாணையை முதல்வர் ரங்கசாமி ஊழியர்கள் சங்கத்தினரிடம் வழங்கினார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 510 பல்நோக்கு ஊழியர்கள், 3 பணி ஆய்வாளர்களுக்கு ஊதிய முரண்பாடு களையப்பட்டு, நிலுவை தொகையை வழங்க வேண்டுமென பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கங்களின் தலைவர் தனராசு, ஓவர்சீயர், பணி ஆய்வாளர், மெக்கானிக், எம்.டி.எஸ்., ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் முதல்வர் மற்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையேற்று, முதல்வர் ரங்கசாமி கவர்னர் ஓப்புதலுடன், பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கான ஊதிய முரண்களை களைந்து, அதற்கான அரசாணையை சங்க நிர்வாகிகளிடம் நேற்று வழங்கினார்.
இதில், அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீர செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, ஊதிய முரண்பாடுகளை களைந்து, அரசாணை வெளியிட முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.