/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா நினைவு தினம் அரசு சார்பில் மரியாதை
/
இந்திரா நினைவு தினம் அரசு சார்பில் மரியாதை
ADDED : நவ 01, 2025 02:09 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அதனையொட்டி, நுாறடி சாலை மற்றும் விழுப்புரம் சாலை சந்திப்பில் உள்ள இந்திரா சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்களின் தேச பக்தி பாடல்கள் பாடி, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், ஆறுமுகம், தலைமைச் செயலர் சரத் சவுகான், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, செய்தித்துறை செயலர் முகமது அசன் அபித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்., கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் எம்.எல்.ஏ., வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் உள்ளிட்டோர், இந்திரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

