/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வ.உ.சி., நினைவு தினம் அரசு சார்பில் அஞ்சலி
/
வ.உ.சி., நினைவு தினம் அரசு சார்பில் அஞ்சலி
ADDED : நவ 19, 2025 08:05 AM

புதுச்சேரி: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யின் நினைவு தினம் அரசு சார்பில், அனுஷ்டிக்கப்பட்டது.
அதனையொட்டி, சட்டசபை எதிரில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் சாய்சரவணன்குமார், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
காங்., கட்சி: காங்., சார்பில், மூத்த துணைத் தலைவர் தேவதாஸ், காமராஜர் நகர் தொகுதி பொறுப்பாளர் மருதுபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதிய நீதிக் கட்சி: மாநில அமைப்பாளர் தேவநாதன் தலைமையில் காமராஜ், நடராஜன், இளங்கோ, பிரபு, சேகர், சண்முகம் உள்ளிட்டோர் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

