ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி :என்.ஆர்.காங்., ரவிக்குமார் ஓட்டு சேகரிப்பு
ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி :என்.ஆர்.காங்., ரவிக்குமார் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 01, 2026 07:44 PM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் நேற்று பெரியபேட் பகுதியில் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
வில்லியனுார் தொகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் நேற்று பெரியபேட், உத்திரவாகிணி பேட், கரையான் பேட் பகுதிளில் கூட்டணி கட்சியினருடன் சென்று 'ஜக்கு' சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., ஆட்சியில் நேர்மையான முறையில் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை உயர்த்தியது, இலவச அரிசி வழங்கல், மாணவர்களுக்கு கல்வி கடன் உள்ளிட்ட திட்டங்கள் தடையின்றி கிடைக்க முதல்வர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி வர வேண்டும். அதற்கு, 'ஜக்கு' சின்னத்தில் ஓட்டு போட்டு என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் எடுத்து கூறி ஓட்டு சேகரித்தார்.
அப்போது கிராமத்தில் பெரும்பாலன வீடுகளில் ஆரத்தி எடுத்தும், மலர்கள் துாவி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
