/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
/
அரசு பள்ளி ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
ADDED : பிப் 24, 2026 04:33 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் 1 முதல் 9 வரை மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொது ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 மற்றும் 2ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி மொழிப்பாடம், 14ம் தேதி ஆங்கிலம், 16ம் தேதி கணித பாடத்துக்கும் தேர்வு நடைபெறும். 3 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 12ம் தேதி மொழிப்பாடம், 13ம் தேதி ஆங்கிலம், 14ம் தேதி கணிதம், 16ம் தேதி சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்துக்கும் தேர்வு நடைபெறும்.
6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் தேதி ஆங்கிலம், 13ம் தேதி மொழிப்பாடம், 14ம் தேதி அறிவியல், 16ம் தேதி சமூக அறிவியல், 17ம் தேதி கணித பாடத்துக்கும், 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் தேதி மொழிப்பாடம், 13ம் தேதி ஆங்கிலம், 14ம் தேதி கணிதம், 16ம் தேதி அறிவியல், 17ம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கும் தேர்வு நடைபெறும்.
இதில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 4, 5ம் வகுப்புக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.
11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 12ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், அச்சுக்கலை, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடங்களுக்கும், 13ம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கும், 14ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், மனையியல், எலக்ட்டிரிக்கல் டெக்னாலஜி, எலக்ட்ரானிக் டெக்னாலஜி, ஆட்டோமோட்டிவ் ஆகிய பாடங்களுக்கு நடக்கிறது.
16ம் தேதி மொழிப்பாடம், உளவியல் ஆகிய பாடங்களுக்கும், 17ம் தேதி உயிரியியல், வணிகவியல் படிப்பு, ஜவுளி வடிவமைப்பு, குளிர்சாதனம், புவியியல், ஓவியம் ஆகிய பாடங்களுக்கும், 18ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், வெப் அப்ளிக்கேஷன், தகவல் நடைமுறைகள் ஆகிய பாடங்களுக்கும், 23ம் தேதி கணிதம், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், 24ம் தேதி அலுவலக நடைமுறைகள் மற்றும் பயிற்சி, என்சிசி, வரலாறு, உடற்கல்வி ஆகிய பாடங்களும் தேர்வு நடைபெறும்.
இத்தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். இத்தேர்வு முடிந்தவுடன் மார்ச் 30ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொது ஆண்டு தேர்வு முடிந்து, 1 முதல் 5ம் வகுப்பு வரை மார்ச் 17 முதல் 31ம் தேதி வரையும், 6 முதல் 9ம் வகுப்பு வரை, மார்ச் 18ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
2026--27ம் கல்வி ஆண்டுக்கு ஏப்.1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு ஏப்.30ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறவுள்ளது. மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

