/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரடு முரடான மைதானத்தால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி
/
கரடு முரடான மைதானத்தால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : மே 01, 2025 05:00 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள கரடுமுரடான விளையாட்டு மைதானத்தால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை செயல்படுகிறது. இங்கு படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பள்ளி திடலில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். இத்திடலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு திடல் போதிய பாரமரிப்பின்றி,செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டிதிடல் சுருங்கி உள்ளது.திடலை சுற்றி புற்கள் முளைந்து கிடப்பதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடுகளை மேய்கின்றனர்.
இதனால் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். விளையாட்டு திடலை சுற்றி முறையான மதில் சுவர் அமைத்து, திடலை பரமாரிக்க கல்வித்துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.