/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதர் மண்டிய விளையாட்டு திடல் அரசு பள்ளி மாணவர்கள் அவதி
/
புதர் மண்டிய விளையாட்டு திடல் அரசு பள்ளி மாணவர்கள் அவதி
புதர் மண்டிய விளையாட்டு திடல் அரசு பள்ளி மாணவர்கள் அவதி
புதர் மண்டிய விளையாட்டு திடல் அரசு பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : நவ 07, 2024 03:04 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதர் மண்டிய விளையாட்டு திடலால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை செயல்படுகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளியில் உள்ள விளையாட்டு திடலில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இங்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு திடல் போதிய பராமரிப்பின்றி உள்ளது. சுற்றி செடி, கொடி உள்ளிட்ட புதர் மண்டி கிடப்பதால் விளையாட்டு திடல் குறுகி உள்ளது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் காணப்படுகிறது.
திடல் குறுகியுள்ள நிலையில், விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள மாணவர்களுக்கு சிரமமாக உள்ளது. அதே சமயத்தில் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால், மாணவர்கள் அச்சமடைகின்றனர். எனவே, விளையாட்டு திடலை சுற்றி முறையான மதில் சுவர் அமைத்து, திடலை பராமரிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.