/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிகளில் மீண்டும் பயோமெட்ரிக்
/
அரசு பள்ளிகளில் மீண்டும் பயோமெட்ரிக்
ADDED : ஆக 21, 2025 08:01 AM
புதுச்சேரி, : அரசு பள்ளிகளில் மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கை:
பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள், ஊழியர்கள் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்பட வேண்டும். அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் வருகையை கண்காணிக்க வேண்டும்.
அதில், ஏதேனும் பிரச்னை இருந்தால், உடனடியாக கல்வித்துறைக்கு அறிவிக்க வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த உத்தரவு விதி விலக்கு இல்லாமல் பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

