/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க பொதுப்பேரவை கூட்டம்
/
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க பொதுப்பேரவை கூட்டம்
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க பொதுப்பேரவை கூட்டம்
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க பொதுப்பேரவை கூட்டம்
ADDED : அக் 21, 2024 06:10 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் 19வது பொதுப்பேரவை கூட்டம் குயவர்பாளையத்தில் நடந்தது.
கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். குழு உறுப்பினர் பொற்செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் குலோத்துங்கன், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் பங்கேற்று மாநில நல்லாசிரியர் விருது பெற்ற 16 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்து மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ள 15 மாணவர்களுக்கும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் பாட வாரியாக நுாறு சதவீதம் மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகை 4.5 சதவீதம் வழங்குவது என ஒப்புதல் பெறப்பட்டது. சங்கத்தின் எதிர்கால திட்டமாக ரூ. 20 லட்சம் வரை பாரத் ஸ்டேட் வங்கியில் காப்பீட்டு திட்டத்தினை சங்கத்தின் தலைவர் அறிவித்தார். அத்திட்டத்தில் விருப்பம் உள்ளவர்கள் சேர்ந்து பயன் பெறலாம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறினார்.