/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து
/
கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து
ADDED : அக் 20, 2025 12:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்களுக்கு கவர்னர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளி பண்டிகை நாட்டு மக்களிடையே ஒற்றுமையை- சகோரத்துவத்தை பலப்படுத்துகிறது.
இந்த தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை, மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சியை யும், வெற்றியையும், செழிப் பை யும் தரும் இந்த தீபாவளி மத்தாப்புகளும், பட்டாசுகளும், வாண வேடிக்கைகளும் வானத்தை ஒளிரச் செய்வது போல், உங்கள் அனைவரது வாழ்வையும், மகிழ்ச்சியால் ஒளிரச் செய்யட்டும் என வாழ்த்தியுள்ளார்.
இதேபோன்று சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, துணை சபாநாயகர் ராஜவேலு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அரசு கொறடா ஆறுமுகம் , எம்.எல்.ஏ.,க்கள், சாய்சரவணன்குமார், சந்திரபிரியங்கா, கல்யாணசுந்தரம், நாஜிம், பி.ஆர்.சிவா, அங்காளன், நேரு, ரமேஷ், வைத்தியநாதன், சம்பத், பாஸ்கர், லட்சுமிகாந்தன், செந்தில்குமார், பிரகாஷ்குமார், தியாகராஜன், செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகர், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் சேர்மன் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.