தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர், முதல்வர் பொங்கல் வாழ்த்து

 கவர்னர், முதல்வர் பொங்கல் வாழ்த்து

 கவர்னர், முதல்வர் பொங்கல் வாழ்த்து


ADDED : ஜன 15, 2026 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொங்கலையொட்டி, புதுச்சேரி மக்களுக்கு கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து செய்தி; தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது பொங்கல் திருவிழா. இயற்கையை, உழவுத் தொழிலை போற்றும் விதமாக தமிழர்களின் மாண்புகளையும், கலைகளையும் பெருமைப்படுத்தும் விழாவாக பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் அனைவரது வாழ்விலும் அன்பும்-மகிழ்ச்சியும், இன்பமும்-இனிமையும், நலமும்-வளமும் பெருகிட வாழ்த்துகிறேன் என, தெரிவித்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தி; தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையையும், விவசாயத்துடன் உள்ள நெருங்கிய உறவையும் வெளிப்படுத்துகிறது. குடும்ப ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், உழைப்பின் மதிப்பு, இயற்கையுடன் இணைந்த வாழ்வு ஆகிய தமிழர் பண்பாட்டு அடையாளங்களை எடுத்துரைக்கிறது.இயற்கைக்கும், விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தும் மகிழ்ச்சியான அறுவடைத் திருநாளாம் இந்த பொங்கல் பண்டிகை உங்கள் அனைவரது இல்லத்திலும் மகிழ்ச்சி, நலன், செழிப்பு, அமைதியை நிலவச் செய்யட்டும். பொங்கலின் இனிமை உங்கள் வாழ்க்கையில் நல்ல தொடக்கங்களையம், வெற்றிகளையும் பெருகச் செய்யப்படும் என, கூறியுள்ளார்.

இதேபோல், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா, செல்வகணபதி எம்.பி., காங்., தலைவர் வைத்திலிங்கம், பா.ஜ., தலைவர் ராமலிங்கம், த.வெ.க., சாமிநாதன், இந்திய கம்யூ., சலீம், மா.கம்யூ., ராமச்சந்திரன், லட்சிய ஜனநாயக கட்சி மார்ட்டின், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us