தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர், முதல்வர் மே தின வாழ்த்து 

கவர்னர், முதல்வர் மே தின வாழ்த்து 

கவர்னர், முதல்வர் மே தின வாழ்த்து 


ADDED : மே 01, 2025 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மே தினத்தை முன்னிட்டு, கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து: உழைப்பாளர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். பொருளாதார முன்னேற்றத்தின் அச்சாணியாக இருப்பவர்கள். அவர்களுடைய நலனை, வாழ்வை, வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் நம் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை தெரவித்து கொள்கிறேன்.

முதல்வர் ரங்கசாமி வாழ்த்து: உழைப்போரே உயர்ந்தோர் என்ற உன்னத வாக்குக்கு ஏற்ப உழைப்பை மூலதனமாக கொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அயராது பாடுபடும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன் குமார், எதிர்கட்சித் தலைவர் சிவா, அரசு கொறடா ஆறுமுகம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் வெங்கட்டராமன், தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் மே தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us