ADDED : மே 01, 2026 03:21 AM
புதுச்சேரி: மே தினத்தை முன் னிட்டு, கவர்னர், முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .
கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து:
உழைப்பாளர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். இவர்கள் பொருளாதார முன்னேற்றத்தின் அச்சாணியாக இருக்கிறார்கள். அவர்களுடைய நலனை, வாழ்வை பாதுகாப்பதில் நம் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். உழைக்கும் மக்கள் அனைவரும் எனது மே தின வாழ்த்துகளை தெரவித்து கொள்கிறேன்' என்றார்.
முதல்வர் ரங்கசாமி வாழ்த்து உழைப்பை மூலதனமாகக் கொண்டு உலகை உயர்த்துபவர்கள் உழைப்பாளர்கள். ஒவ்வொரு பணியும், அது சிறியதாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னேற்றத்திற்கு அயராது பாடுபடும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.
இதேபோல், எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வ கணபதி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனி ஜெயகுமார், ஜான்குமார், திருமுருகன், எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள், ஆறுமுகம், ரமேஷ், பாஸ்கர், கல்யாணசுந்தரம், செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம், இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மே தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
