தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர், முதல்வர் புதுச்சேரியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். சட்டசபையில் நேரு எம்.எல்.ஏ., பேச்சு 

கவர்னர், முதல்வர் புதுச்சேரியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். சட்டசபையில் நேரு எம்.எல்.ஏ., பேச்சு 

கவர்னர், முதல்வர் புதுச்சேரியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். சட்டசபையில் நேரு எம்.எல்.ஏ., பேச்சு 


ADDED : ஆக 25, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: கவர்னர் முதல்வர் இணைந்து புதுச்சேரியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., பேசினார்.

 நிரந்தர சபாநாயகர் இல்லாமல்,தற்காலிக சபாநாயகர் மூலம் சபையை நடத்துவது வருத்தத்திற்குரியது. முதல்வர், கவர்னர் இணைந்து புதுச்சேரியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.760 கோடி அளவில் பணிகள் நடந்துள்ளது. அண்ணா விளையாட்டரங்கம், புதிய பஸ் ஸ்டாண்ட், எக்கோ பாராஸ்ட் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வரப்படவில்லை. 

கண்டாக்டர் தோட்டத்தில், குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.4 கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளவில்லை, உப்பாறு கரையை மேம்படுத்தும் பணி 5 சதவீதம் கூட நடக்கவில்லை.

நலத்திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். நிர்வாக தேவைகளுக்கு ஏற்ப அரசு பணியிடங்களை உருவாக்கி, நிரப்ப வேண்டும். அரசு பணியார்கள் தேர்வுகளில் குளறுபடிகள் நடப்பதாக வழக்கு தொடுக்கப்படுகிறது. தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும். 

ராஜிவ் சதுக்கம் முதல் கனகசெட்டிக்குளம் வரை ரூ.15 கோடி செலவில் நடக்கும் மேம்பாட்டு பணிகளில் போதிய கல்வெர்ட்டுகள் அமைக்க வேண்டும்.  ஏர்போர்ட் சாலை இ.சி.ஆர்., சந்திப்பில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கிறது.  

நரம்பையில் ரூ.500 கோடி மதிப்பில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பது,  நீண்டகால திட்டம். எனவே தற்போதைய குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us