/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வர் புத்தாண்டு வாழ்த்து
/
கவர்னர், முதல்வர் புத்தாண்டு வாழ்த்து
ADDED : ஜன 01, 2025 05:18 AM
புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து செய்தி: இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும், வளத்தையும் நலத்தையும் தந்து மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் நிலை பெறச் செய்யும் ஆண்டாக அமையட்டும்.
இந்தியாவின் ஒருமைப்பாடு, பொருளாதார வளர்ச்சி, தலைமை தகுதி போன்றவற்றை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் ஆண்டாக இது அமையும் என்று நம்புகிறேன். பிரதமரின், 'வளர்ச்சி அடைந்த பாரதம் - 2047' என்ற இலக்கை நோக்கி அனைவரும் பயணிப்போம்.
முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரி மாநில மக்கள் தங்களது வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளர்ச்சியை காண வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் கொண்டு வருவதாக அமையட்டும். உங்கள் வாழ்வின் பாதை அன்பாலும், வெற்றியாலும் நிரப்பப்படட்டும்.
அதேபோல சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன் குமார், எதிர்க்கட்சித்தலைவர் சிவா, அரசு கொறடா ஆறுமுகம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, ராமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் செயலாளர் ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.