ADDED : ஏப் 22, 2025 04:23 AM
புதுச்சேரி: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு கவர்னர் கைஷாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதவாது:
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது. போப் பிரான்சிஸ், கடந்த 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையை வழி நடத்தி, மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
உலகில் நடந்து வரும் போர்களுக்கு எதிராக குரல் கொடுத்து உலக சமாதானத்தை விரும்பியவர். கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் உலகம் எங்கும் உள்ள மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர்.
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், திருமுருகன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.