/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிக்கெட் வீரர்களுக்கு கவர்னர் வாழ்த்து
/
கிரிக்கெட் வீரர்களுக்கு கவர்னர் வாழ்த்து
ADDED : அக் 16, 2024 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஆரோவில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களை கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்தினார்.
ஆரோவில்லின், 150வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில், அதன் அறக்கட்டளையால் கலாசார அமைச்சகத்துடன் இணைந்து, கடந்த ஆகஸ்டில்கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 20 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்தஅணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது. மேலும், அனைத்து அணிகளுக்கும் ரூ.5 ஆயிரம் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணியினர் ராஜ் நிவாசிற்கு சென்று, கவர்னர் கைலாஷ்நாதனிடம் வாழ்த்து பெற்றனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை இயக்குநர் சுவர்ணம்பிகா மேற்கொண்டார்.