தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் தொழில் கண்காட்சி கவர்னர் துவக்கி வைப்பு

புதுச்சேரியில் தொழில் கண்காட்சி கவர்னர் துவக்கி வைப்பு

புதுச்சேரியில் தொழில் கண்காட்சி கவர்னர் துவக்கி வைப்பு


ADDED : செப் 16, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தொழில் கண்காட்சியை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி கிளை சார்பில், மூன்று நாட்கள் நடக்கும் தொழில் கண்காட்சி நுாறடி சாலை சுகன்யா கன்வென்ஷனில் நேற்று துவங்கியது. கவர்னர் கைலாஷ்நாதன் கண்காட்சியை துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், ஜான்குமார் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், தொழில்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா பங்கேற்றனர். 

இந்திய தொழில் கூட்டமைப்பு, புதுச்சேரி கிளை தலைவர் நடராஜன் பேசுகையில், ‘கடந்த ஆண்டு 31 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. எதிர்காலத்தில் 200க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் நடத்த திட்டமிட்டுள்ளதாக பேசினார். 

தொழில் கண்காட்சிக்கான தலைவர் ஷா, புதுச்சேரி தொழில்முனைவோரின் உற்பத்தி திறன் மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்துவதே நோக்கமாகும்’ என்றார். நிகழ்ச்சியில், தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 

இக்கண்காட்சி, நாளை 18ம் தேதியுடன் நிறைவடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us