/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓரிரு நாளில் ரூ.5 ஆயிரம் நிவாரணம் கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்
/
ஓரிரு நாளில் ரூ.5 ஆயிரம் நிவாரணம் கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்
ஓரிரு நாளில் ரூ.5 ஆயிரம் நிவாரணம் கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்
ஓரிரு நாளில் ரூ.5 ஆயிரம் நிவாரணம் கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்
ADDED : டிச 12, 2024 06:12 AM
புதுச்சேரி: பெஞ்சல் புயல் பாதிப்புக்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்க 177 கோடி ரூபாய் நிவாரண கோப்புக்கு கவர்னர் கைலாஷ்நாதன் அனுமதி அளித்துள்ளார்.
பெஞ்சல் புயலால் பாதித்த அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 5 ஆயிரம் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி கடந்த 2ம் தேதி அறிவித்திருந்தார். இத்தொகை எப்போது கிடைக்கும் என, மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிவாரண நிதிக்கான கோப்பு குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் நிதித்துறைக்கு கடந்த சில நாட்கள் முன் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இக்கோப்பு நிதித் துறை மூலம் கவர்னர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று அனுமதி அளித்துள்ளார். அதன்படி மாகே பிராந்தியத்தை தவிர்த்து, புதுச்சேரி, காரைக்கால், ஏனாமை சேர்ந்த 3.54 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 177 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. கவர்னர் அனுமதி அளித்துள்ளதால் ஓரிரு நாட்களில் நிதி துறையின் நடைமுறைகள் முடிந்து, 5 ஆயிரம் நிவாரண நிதி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் புதுச்சேரியில் 1,60,422 ரேஷன் கார்டுகள் உள்ளன. காரைக்கால்-33,977, ஏனாமில்-10,895 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் வழங்க அரசுக்கு 102 கோடியே 60 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
இதேபோல் வறுமை கோட்டிற்கு மேல் புதுச்சேரியில் 1,15,894, காரைக்கால்-28,653, ஏனாம்-4,965 என மொத்தம் 1,49,512 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணமாக வழங்க 74 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவாகும்.