தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரகதி பாத யாத்திரை மற்றும் விகாஸ் யாத்திரை: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்

பிரகதி பாத யாத்திரை மற்றும் விகாஸ் யாத்திரை: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்

பிரகதி பாத யாத்திரை மற்றும் விகாஸ் யாத்திரை: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்


UPDATED : ஜூன் 20, 2026 07:16 PM

ADDED : ஜூன் 20, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 07:16 PM ADDED : ஜூன் 20, 2026 07:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி 12 ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்திருப்பதையொட்டி, மக்கள் நலத்திட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பிரகதி பாத யாத்திரை மற்றும் விகாஸ் யாத்திரை நடந்தது.

புதுச்சேரி பான்சியோனா பிரண்ட்ஷிப் பள்ளியில் துவங்கிய இந்த யாத்திரையை, கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர்கள் முத்தம்மா, கேசவன், முகமது யாசின், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

யாத்திரையில், மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் கட்டப்பட் பான்சியோனா பள்ளி, புதுச்சேரி நகராட்சி கட்டடம் (மேரி கட்டடடம்), வ.உ.சி. மேல்நிலைப் பள்ளி, கலவைக் கல்லுாரி, குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம், புதுச்சேரி பஸ் நிலையம், கடலுார் சாலை ரயில்வே மேம்பாலம், உப்பனாறு மேம்பாலம், மறைமலை அடிகள் சாலை சந்திப்பு, அண்ணா திடல், தாவரவியல் பூங்கா ஆகிய 10 இடங்களுக்கு பொது மக்கள் வாகனத்தின் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக, கவர்னர் கைலாஷ்நாதன் 'பாரதப் பிரதமரின் தொலைநோக்கு பார்வை, இந்தியாவால் முடியும் என்ற உறுதியான நம்பிக்கை, மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை உள்ளடக்கிய நலத்திட்டங்கள், புதுச்சேரியில் மத்திய அரசு, உலக வங்கி, ஹட்கோ நபார்டு வங்கிகளில் உதவியோடு நடைபெறும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், புதுச்சேரி ரயில் நிலைய விரிவாக்கம் அதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து விவரித்தார்.

மேலும், மத்திய அரசின் நிதி உதவியோடு புதுச்சேரியில் உள்ள 78 ஏரிகள் சீரமைக்கப்பட்டு நிலத்தடி நீரை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியுடன், தான் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us