தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 5ம் ஆண்டு யோகா பயிற்சி முகாம் கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு

5ம் ஆண்டு யோகா பயிற்சி முகாம் கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு

5ம் ஆண்டு யோகா பயிற்சி முகாம் கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு


UPDATED : மே 01, 2026 09:10 PM

ADDED : மே 01, 2026 08:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 09:10 PM ADDED : மே 01, 2026 08:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிவராம்ஜி யோகா மையம் மற்றும் சமர்ப்பணம் சேவை மையம் சார்பில், நடந்த 5ம் ஆண்டு யோகா பயிற்சி முகாமை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.

புதுச்சேரி சிவராம்ஜி யோகா மையம் மற்றும் சமர்ப்பணம் சேவை மையம் சார்பில், மாணவர்களிடையே ஒழுக்கம், பண்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் யோகா பண்புப் பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. முகாமில் யோகா மற்றும் பிராணாயாமம்,​ தற்காப்புக் கலைகளான களரி மற்றும் சிலம்பம்,​ பரதநாட்டியம், இசை, ஓவியம் மற்றும் கதை சொல்லுதல்,​ விளையாட்டுப் போட்டிகள், வினாடி - வினா மற்றும் மருத்துவம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கடந்த 25ம் தேதி மற்றும் 26ம் தேதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மூலக்குளம் அமிர்த வித்யாலயா பள்ளி வளாகத்தில் முகாமிற்கான முன்பதிவு நடந்தது.

இந்த ஆண்டிற்கான யோகா பண்பு பயிற்சி முகாம், மூலக்குளம், அமிர்த வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது. முகாமை கவர்னர் கைலாஷ்நாதன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சிவராம்ஜி யோகா மைய தலைவர் பால்ராஜா வரவேற்றார்.

மாணவர்கள் யோகாசனங்கள் நிகழ்த்தி காட்டினர். நிகழ்ச்சியில் பொருளாளர் மனோகரன், மாதா ஸ்ரீ அமிருதானந்தமயி சீடர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

நேற்று துவங்கிய பயிற்சி முகாம் வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us