/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாஷினி மொழி பெயர்ப்பு செயலி கவர்னர் கைலாஷ்நாதன் அறிமுகம்
/
பாஷினி மொழி பெயர்ப்பு செயலி கவர்னர் கைலாஷ்நாதன் அறிமுகம்
பாஷினி மொழி பெயர்ப்பு செயலி கவர்னர் கைலாஷ்நாதன் அறிமுகம்
பாஷினி மொழி பெயர்ப்பு செயலி கவர்னர் கைலாஷ்நாதன் அறிமுகம்
ADDED : ஜூலை 09, 2025 12:48 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு, தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், பாஷினி மொழிபெயர்ப்பு செயலி மற்றும் அரசு துறைகளின் இணையதள துவக்க விழா அக்கார்டு ஓட்டலில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி பாஷினி செயலியை அறிமுகப்படுத்தி, அரசுத்துறை இணையதளங்களை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், தலைமைச் செயலர் சரத் சௌகான், செயலர் முத்தம்மா, இயக்குனர் சிவராஜ் மீனா மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது, பாஷினி நிர்வாகம் மற்றும் புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத்துறை இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பாஷினி அமைப்பின் நிர்வாகத் தலைவர் அமிதாப் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இயக்குனர் சிவராஜ் மீனா இருவரும் கவர்னர் முன்னிலையில் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.