தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சான்றிதழ் ;கவர்னர் கைலாஷ்நாதன் வழங்கி பாராட்டு 

 சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சான்றிதழ் ;கவர்னர் கைலாஷ்நாதன் வழங்கி பாராட்டு 

 சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சான்றிதழ் ;கவர்னர் கைலாஷ்நாதன் வழங்கி பாராட்டு 


ADDED : ஜன 12, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 03:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மருத்துவ முகாம்களில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தேசிய மருத்துவர் கழகம் சார்பில் புதுச்சேரி, கடலோர கிராமங்களில் 25 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பயனடைந்தனர். ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஆலோசனையும் தரப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, விவேகானந்தா பள்ளியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல... நாமும்தான். உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாடு தேசிய மருத்துவர்கள் கழகம், ஆரோக்கிய பாரதி, புதுச்சேரி சேவா பாரதி அமைப்புகள் சார்பில் கடலோர கிராம மருத்துவ முகாம் நிறைவு விழா லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருத்துவ முகாம்களில் சேவை ஆற்றிய மருத்துவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., தேசிய மருத்துவர் கழகத் தலைவர் விஜய் ஓசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us