ADDED : டிச 19, 2024 05:55 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மாகி கடற்கரையில் துாய்மைப் பணியை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், இரு நாள் அரசுமுறை பயணமாக மாகி சென்றார். நேற்று முன்தினம் அவர் பந்தக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் நடந்த மாகி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை தாங்கினார். மேலும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டமும் நடைபெற்றது.
இதில் ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., மண்டல நிர்வாக அதிகாரி மோகன்குமார், நகராட்சி ஆணையர் சத்தியேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று மாகி கடற்கரையில் துாய்மை பணியை கவர்னர் துவக்கி வைத்தார். தொடர்ந்து கண்ணுார் நூற்பாலை மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டார்.
