/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசநோய் ஒழிப்பு ஆலோசனை காணொலியில் கவர்னர் பங்கேற்பு
/
காசநோய் ஒழிப்பு ஆலோசனை காணொலியில் கவர்னர் பங்கேற்பு
காசநோய் ஒழிப்பு ஆலோசனை காணொலியில் கவர்னர் பங்கேற்பு
காசநோய் ஒழிப்பு ஆலோசனை காணொலியில் கவர்னர் பங்கேற்பு
ADDED : டிச 22, 2024 07:42 AM

புதுச்சேரி: காசநோய் ஒழிப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் கவர்னர் கைலாஷ்நாதன் காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.
தேசிய அளவில் 'தீவிர காசநோய் ஒழிப்பு இயக்கம்' தொடங்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கவர்னர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில், நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் நட்டா தலைமை தாங்கினார். இதில் கவர்னர் கைலாஷ்நாதன் காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் தீவிர காசநோய் ஒழிப்பு இயக்கத்தின் செயல்பாடு மற்றும் முன்னெடுக்க வேண்டிய புதிய யுத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டன.