/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சனீஸ்வரர் கோவில் 'பேஸ்புக்' பக்கத்தை மீட்க மத்திய இணை அமைச்சரிடம் கவர்னர் கோரிக்கை
/
சனீஸ்வரர் கோவில் 'பேஸ்புக்' பக்கத்தை மீட்க மத்திய இணை அமைச்சரிடம் கவர்னர் கோரிக்கை
சனீஸ்வரர் கோவில் 'பேஸ்புக்' பக்கத்தை மீட்க மத்திய இணை அமைச்சரிடம் கவர்னர் கோரிக்கை
சனீஸ்வரர் கோவில் 'பேஸ்புக்' பக்கத்தை மீட்க மத்திய இணை அமைச்சரிடம் கவர்னர் கோரிக்கை
ADDED : ஜன 08, 2024 04:42 AM
புதுச்சேரி: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தேவஸ்தான பேஸ்புக்கை மீட்டுத் தர, மத்திய இணை அமைச்சர் முருகனிடம் கவர்னர் தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தேவஸ்தான பேஸ்புக்கை கடந்த 3ம் தேதி மாலை மர்ம நபர்கள் ஹேக் செய்து, பேஸ்புக் பக்கத்தில் ஆபாச படத்தை பதிவிட்டனர்.
தொடர்ந்து 4 மற்றும் 5 ஆகிய தேதிகளிலும் மீண்டும் ஆபாச படம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சைபர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டாலும், ஆபாச படம் மட்டுமே நீக்கப்படுகிறது. ஆனால் சனீஸ்வர பகவான் கோவில் பேஸ்புக் ேஹக்கரிடமிருந்து இன்னும் மீட்கப்படவில்லை.
இந்நிலையில், கோவையில் மத்திய இணை அமைச்சர் முருகனை புதுச்சேரி கவர்னர் தமிழிசை நேற்று சந்தித்தபோது, சனீஸ்வர பகவான் கோவில் பேஸ்புக் பக்கத்தில் தவறான பதிவுகள் பதிவிடாமல் தடுக்க வேண்டும் என்றும், கோவிலின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை மீட்டுத் தர வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.
இதனை கேட்ட மத்திய இணை அமைச்சர் முருகன், உடனே மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரை தொடர்பு கொண்டு பேசினார். இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதற்கிடையில் நேற்று மாலை 3:00 மணியளவில் சனீஸ்வரபகவான் கோவில் பேஸ்புக் பக்கத்தில் 4வது முறையாக மீண்டும் ஆபாச படம் பதிவிடப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து விஷமிகள் செய்யும் விவகாரம் பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது.