/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காமீஸ்வரர் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம்
/
திருக்காமீஸ்வரர் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம்
ADDED : அக் 31, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று காலை 10:45 மணியளவில் வருகை தந்தார்.
அவரை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ., சிவா ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்து வரவேற்றனர். பின்னர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் கோவில் தல வரலாறு எடுத்து கூறினர். அதனை தொடர்ந்து மூலவருக்கு அர்ச்சனை செய்யப்பட்டு சாமி தரிசனம் செய்தார்.
கோவில் உள் பிரகாரத்தை சுற்றி வந்து, கவர்னர் விடைபெற்று சென்றார்.