/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் நில மோசடியில் கவர்னர் அதிரடி
/
கோவில் நில மோசடியில் கவர்னர் அதிரடி
ADDED : அக் 16, 2024 05:22 AM
புதுச்சேரி : காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடியில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
காரைக்கால், பார்வதீஸ்வர் கோவில் நில மோசடி விவகாரத்தில் போலீஸ்துறை விசாரணையில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகாரிகள், மற்றவர்கள் என்ற பாரபட்சம் இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அறிக்கை மூலம், எல்லோருக்குமான பொதுத்தகவல் தரப்பட்டுள்ளது. அறநிலையத்துறை செயலருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களைக் கணக்கெடுத்து கடந்த, 1974ல், ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி கோவில் நிலங்கள் இருக்கிறதா என்பது கண்டறியப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.