தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவர்னர்

 அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவர்னர்

 அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவர்னர்


ADDED : நவ 29, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காது வலியால் அவதிப்பட்ட கவர்னர் கைலாஷ்நாதன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், நேற்று காலை ராஜ்நிவாசில் அலு வலக பணியை மேற்கொண் டிருந்தார். இந்நிலையில், அவருக்கு காதில் திடீர் வலி ஏற்பட்டது. அதனை யொட்டி, மதியம் 12 மணிக்கு, சட்டசபை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.

அவரை, சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் வரவேற்று, காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவிற்கு அழைத்து சென்றார்.

அங்கு, அவருக்கு காது, மூக்கு, தொண்டை பிரிவின் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து கவர்னர், ராஜ்நிவாஸ் புறப்பட்டு சென்றார்.

கவர்னர் கைலாஷ்நாதன், புதுச்சேரிக்கு வந்தது முதல் தனக்கும், தனது குடும்பத்தினருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us