sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கவர்னரின் அதிரடி நடவடிக்கை: கலக்கத்தில் அரசியல் கட்சிகள்

/

 கவர்னரின் அதிரடி நடவடிக்கை: கலக்கத்தில் அரசியல் கட்சிகள்

 கவர்னரின் அதிரடி நடவடிக்கை: கலக்கத்தில் அரசியல் கட்சிகள்

 கவர்னரின் அதிரடி நடவடிக்கை: கலக்கத்தில் அரசியல் கட்சிகள்


ADDED : டிச 28, 2025 05:34 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டையே உலுக்கிய போலி மருந்து மோசடியில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாபியா கும்பல், பல ஆண்டுகளாக புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், அந்தந்த காலகட்டங்களில் அப்போதைய ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு தங்கள் தொழிலை எவ்வித பாதிப்பின்றி தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.

தற்போது பிடிப்பட்ட மாபியா கும்பலின் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகளை கைது செய்ய வலியுறுத்தி முதல்வர் மற்றும் கவர்னருக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. இந்நிலையில் கவர்னர் எடுத்த அதிரடி முடிவால், யாருமே எதிர்பாராத வகையில் முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி சத்தியமூர்த்தியை போலி மருந்து ஜி.எஸ்.டி., மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

வனத்துறை அதிகாரியாக புதுச்சேரிக்கு வந்த சத்தியமூர்த்தி அப்போது இருந்த காலகட்டத்தில் புதுச்சேரியில் உள்ள பிரபல அரசியல்வாதிகளுடன் மிகுந்த நெருக்கத்துடன் இருந்துள்ளார். இவர் பிப்டிக் மேலாண் இயக்குனராக இருந்த காலகட்டத்தில் இந்த போலி மருந்து மாபியவுடன் நட்பு ஏற்பட்டு, மாபியா கும்பலுக்கு பல்வேறு வகையான உதவிகளை பின் னணியில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியாக இவர் பணியாற்றிய பகுதிகளில் தனக்கு ஒரு ஆதரவாளர் வட்டங்களை உருவாக்கி இவருக்கு பணியிட மாறுதல் வந்தபோது அதனை எதிர்த்து இவரது ஆதரவாளர்கள் அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் புதுச்சேரி முழுவதும் போஸ்டர் ஒட்டி போரா ட்டங்களில் ஈடுபட்டனர்.

அதன்பின் தனது அரசு பதவியை ராஜினாமாவை செய்து விட்டு அரசியலில் குதிக்க முயற்சி செய்தபோது, இவர் மேல் இருந்த நிர்வாகம் ரீதியான பிரச்னை காரணமாக இவரது ராஜினாமா ஏற்கப்படாமல் நிலுவையில் இருந்தது. அந்த நேரத்தில் புதுச்சேரி பா.ஜ.,வில் இணைந்து முக்கிய பதவியை கைப்பற்றலாம் என பல்வேறு முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். அதற்காக பல லட்ச ரூபாய் தண்ணியாக செலவழித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை கவர்னர் கைலாஷ் நாதன் தலைமையில் பாகூரில் தடபுடலாக கொண்டாடி பா.ஜ.,வினரையே அசரவைத்தார். ஆனால் இவருடைய பின்புலத்தை மோப்பம் பிடித்த டில்லி பா.ஜ. தலைமை இவரை கடைசி வரை கட்சியில் சேர்க்காமல் மிகுந்த கவனத்துடன் இருந்து விட்டது.

இந்த நிலையில் தான் போலி மருந்து மாபியா கும்பலுக்கு ஜி.எஸ்.டி., வரி பிரச்னையில் சிக்கிக் கொண்டு தற்போது சிறையில் உள்ளார். புதுச்சேரியில் முதல்வர் கனவுடன் வலம் வந்த முன்னாள் வனத்துறை அதிகாரி சத் தியமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டதால் அவருடன் நெருக்கமாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு, அடுத்த கட்ட நடவடிக்கை நம் மீது பாயுமோ என்ற அச்சம் அவர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.






      Dinamalar
      Follow us