/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னரின் குடியரசு தின தேனீர் விருந்து
/
கவர்னரின் குடியரசு தின தேனீர் விருந்து
ADDED : ஜன 25, 2024 04:49 AM
புதுச்சேரி : குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தை தி.மு.க., காங்., கம்யூ., கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
குடியரசு தின விழா முடிந்து கவர்னர் மாளிகையில், வழக்கமாக தேனீர் விருந்து நடக்கும். இந்தாண்டு நடக்கும் தேனீர் விருந்திற்காக கவர்னர் மாளிகையில் இருந்து எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'புதுச்சேரி கவர்னர் மாளிகை பா.ஜ., கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜ., கட்சி தலைவர் போல் செயல்படுகிறார். இதை கவர்னர் மாற்றி கொள்ளவில்லை. இதனால் கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தை தி.மு.க., புறக்கணிப்பதாக எதிர்கட்சி தலைவர் சிவா நேற்று அறிவித்தார்.
வைத்திலிங்கம் எம்.பி., அறிக்கையில் கூறியதாவது:
மத்திய அரசு தற்போது முன்னிலைப்படுத்தும் மருத்துவ காப்பீடு திட்டம், கல்வீடு கட்டும் திட்டம், இலவச காஸ் திட்டம், குடிநீர் இணைப்பு திட்டம் ஆகிய அனைத்திலும் புதுச்சேரி ஏற்கனவே காங்., ஆட்சியில் தன்னிறைவு பெற்றுவிட்டது.
இத்திட்டங்களுக்காக வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்ரா என்ற நிகழ்ச்சி மூலம் புதுச்சேரியில் தேவையின்றி கவர்னர் பிரசாரம் செய்கிறார். அரசு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெறாமல் உள்ளது.
காங்., ராகுல் ஒற்றுகை யாத்திரை முடக்க நினைக்கம் மத்திய மாநில அரசை கண்டித்து கவர்னர் மாளிகையில் நடக்கும் தேனீர் விருந்தை காங்., புறக்கணிக்கிறது.
காங்., சட்டசபை தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கூறுகையில், 'மத்தியில் காங்., ஆட்சி இருந்தபோது கவர்னர்கள் மாநில அரசின் தினசரி பணிகளில் தலையிட மாட்டார்கள்.
ஆனால், தற்போதுள்ள கவர்னர் தினசரி பணிகளில் தலையிடுகிறார்.
கவர்னர் கட்சி பணி செய்கிறார். அவரது பதவி மாண்பை மீறி செயல்படுகிறார் என்பதால் அவரது தேனீர் விருந்தை புறக்கணிக்கிறோம்' என்றார்.
இந்திய கம்யூ., கட்சியும் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் சலீம் அறிவித்துள்ளார்.