/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருஷ்ணா நகரில் கவர்னரின் செயலர் ஆய்வு
/
கிருஷ்ணா நகரில் கவர்னரின் செயலர் ஆய்வு
ADDED : டிச 04, 2024 05:39 AM

புதுச்சேரி: கிருஷ்ணா நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை கூடுதல் மோட்டார்கள் மூலம் வெளியேற்ற கவர்னர் செயலர் நெடுஞ்செழியன் அறிவுறுத்தினார்.
பெஞ்சல் புயல் காரணமாக ஏராளமான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதில் கிருஷ்ணா நகருக்கு செல்லும் 12வது குறுக்கு தெரு பிரதான சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இந்நிலையில் கவர்னர் செயலர் நெடுஞ்செழியன், உள்ளாட்சித்துறை இயக்குநர் சக்திவேல், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் ஆகியோர் நேற்று கிருஷ்ணா நகர் 12வது குறுக்கு தெரு பிரதான சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூடுதலான மோட்டார் மூலம் நீரை வெளியேற்றவும், பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறையில் வெளி பிரிவில் பணியாற்றும் ஊழியர்களை கொண்டு தண்ணீர் வெளியேற்றும் பணியை விரைவுப்படுத்த உத்தரவிட்டார்.