/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் தேநீர் விருந்து முதல்வர் பங்கேற்பு
/
கவர்னர் தேநீர் விருந்து முதல்வர் பங்கேற்பு
ADDED : ஜன 27, 2025 05:07 AM

புதுச்சேரி : குடியரசு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கவர்னர் கைலாஷ்நாதன் வரவேற்று, குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
முதல்வர் ரங்கசாமி, சபாநாயர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சி தலைவர் சிவா, செல்வகணபதி எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், ஆறுமுகம், கல்யாணசுந்தரம், பாஸ்கர், சிவசங்கர், ராமலிங்கம், வெங்கடேசன், லட்சுமிகாந்தன், அசோக்பாபு, சம்பத், அனிபால் கென்னடி, பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி, அனைத்து கட்சித் தலைவர்கள், துறை செயலர்கள், போலீஸ் உயரதிகாரிகள், பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதாளர்கள், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது, 2025ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்தியை கவர்னர் கைலாஷ்நாதன் பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார்.