ADDED : மார் 30, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள தெலுங்கு, கன்னட சமுதாய மக்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய் தியில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் உள்ள தெலுங்கு மற்றும் கன்னட சமுதாய மக்களுக்கு யுகாதி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வசந்த காலத்தின் வருகையை குறிக்கும் இந்த புத்தாண்டு தினம் நமது பாரம்பரிய, பண்பாட்டு அடையாளத் தோடு கொண்டாடப்படுகிறது.
இந்த திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி யையும் அமைதியையும் நிறைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.