தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு பல் மருத்துவ கல்லுாரியில் ரூ. 8.85 கோடி மாயமான வழக்கு: மேலும் 5 பேர் கைது; மொபைல், லேப்டாப் பறிமுதல்

அரசு பல் மருத்துவ கல்லுாரியில் ரூ. 8.85 கோடி மாயமான வழக்கு: மேலும் 5 பேர் கைது; மொபைல், லேப்டாப் பறிமுதல்

அரசு பல் மருத்துவ கல்லுாரியில் ரூ. 8.85 கோடி மாயமான வழக்கு: மேலும் 5 பேர் கைது; மொபைல், லேப்டாப் பறிமுதல்


UPDATED : நவ 13, 2026 03:51 PM

ADDED : நவ 13, 2026 03:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 03:51 PM ADDED : நவ 13, 2026 03:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரியின் வங்கி கணக்கிலிருந்து, ரூ.8.85 கோடி பணம் மாயமான வழக்கில் மேலும் 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, கோரிமேட்டில் இயங்கி வரும் அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரியின் வங்கி கணக்கு எச்.டி.எப்.சி., வங்கியில் உள்ளது. கல்லுாரியில் பணியாற்றும் ஊழியர்கள் 260 பேருக்கான 3 மாதத்திற்கான சம்பளம் கடந்த 3ம் தேதி இரவு கல்லுாரி நிர்வாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.8 கோடியே 85 லட்சத்து 39 ஆயிரத்து 962, அரசு கருவூலத்தில் இருந்து கல்லுாரியின் வங்கி கணக்கிற்கு வந்த 2 மணி நேரத்தில் திடீரென மாயமானது.

இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். வங்கி கணக்குகளை ஏற்பாடு செய்து கொடுத்தல், அவற்றின் மூலம் மோசடி பணத்தை பெறுதல், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் கிரிட்டோ கரன்சியாக மாற்றுதல் போன்ற செயலில் சென்னை, கோயம்புத்தார், கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் திருப்பூரை சேர்ந்த சிராஜூதீன் மனைவி பசிரியா, 39; கோயம்புத்துார் முகமது அலி மகன் ஹஜாநஜூபுதீன், 55; சென்னை நயினார் மகன் பேச்சிமுத்து, 50; பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ரமேஷ், 35; சென்னை, மதுரவாயல் சுப்பையா மகன் பிரபாகரன், 35; ஈரோடு, ரங்கம்பாளையம் துரைராஜ் மகன் தர்மேந்திரன், 48; மேற்கு வங்காளம், கொல்கத்தா ஸ்வபன் குமார் சென் மகன் சோமேநாத் சென், 45; ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வழங்கில் தொடர்புடைய தஞ்சாவூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஜோஸ், 27; பிரவீன் ராஜ், 25; சுந்தர், 44; முரளிக்குமார், 40 மற்றும் ஷபிக், 29; ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், ஷபிக் அவரது கூட்டாளியுடன் இணைந்து தொழில் நடவடிக்கைகளுக்காக வங்கிக் கணக்குகள் தேவைப்படுவதாகக் கூறி, சுந்தர் மற்றும் முரளிக்குமார் ஆகியோர் மூலம் டேனியல் என்பவருடன் இணைந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளைப் பெற்று பயன்படுத்தியதும், டேனியல் அறிவுறுத்தலின்படி ஜோஸ், பிரவீன் ராஜ் ஆகியோர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இவ்வாறு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் சைபர் மோசடிப் பணத்தை கிரிட்டோ கரன்சியாக மாற்றுவதற்கு உதவி செய்ததுடன், அதற்காக கமிஷன் தொகையைப் பெற்றதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ரொக்கம், 12 மொபைல்கள், 4 லேப் டாப்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலைகள், நிறுவன முத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us