ADDED : மார் 14, 2024 04:24 AM

புதுச்சேரி, : அரசு துவக்கப் பள்ளி ஆண்டு விழாவில், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பெத்துச்செட்டிப்பேட்டை அரசு துவக்கப் பள்ளி ஆண்டு விழா, நடந்தது. இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறை வட்டம் - 1, பள்ளித்துணை ஆய்வாளர் குலசேகரன், முன்னாள் பள்ளித்துணை ஆய்வாளர் மல்லிகா கோபால், மனநல டாக்டர் லெபோல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் தமயந்தி ஜாக்குலின் வரவேற்றார். ஆசிரியை இசையமுது ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள் கலைவாணி, கலையரசி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஆசிரியை சியாமளா நன்றி கூறினார்.

