/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவிகள் ஆரண்ய காட்டிற்கு களப்பயணம்
/
அரசு பள்ளி மாணவிகள் ஆரண்ய காட்டிற்கு களப்பயணம்
ADDED : அக் 26, 2024 06:28 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவாக ஆரண்ய காட்டிற்கு மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதல்வர் எழில்கல்பனா தலைமை தாங்கினார்.
ஆசிரியர் சரவணன் வழிகாட்டுதல் படி மாணவிகள் ஆரண்ய காடுகள் உருவான விதம், அவற்றின் சிறப்பு அம்சங்கள், அங்குள்ள மரங்கள் மற்றும் உயிரினங்கள் குறித்த பல அறிவியல் தகவல்கள் பெற்று பயனடைந்தனர்.
தொடர்ந்து, பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் காடுகளை சுற்றிப் பார்த்தனர். இதில், விரிவுரையாளர்கள் சுந்தரி, கவுரி, மலர்விழி, தல்ஃபின் மேரி, கயல்விழி மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர், ஊசுடு ஏரியை மாணவிகள் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் தெய்வகுமாரி, அன்பு மொழி ஆகியோர் செய்திருந்தனர்.