தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு பள்ளி மாணவிகள் களப்பயணம்

அரசு பள்ளி மாணவிகள் களப்பயணம்

அரசு பள்ளி மாணவிகள் களப்பயணம்


ADDED : மார் 08, 2024 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள்,களப்பயணமாக புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவகல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைபார்வையிட்டனர்.

கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 60 பேர் களப்பயணமாக 'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டதின் கீழ் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைபார்வையிட்டு, மருத்துவர்களுடன் கலந்துரையாடி, மருத்துவ கல்வி பயில்வதற்கானவழிமுறைகள்குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, விமான நிலையம், தலைமை தபால் நிலையம், ரோமன் ரோலன் நூலகம், மியூசியம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தனர்.

இந்த களப்பயணத்தின் மூலமாக மாணவிகள் தங்கள் வாழ்வில் வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கும் நிகழ்வுகள் துறை சார்ந்த படிப்பு, வேலை வாய்ப்பு, அனுபவங்களைஅறிந்து கொண்டனர். மாணவிகளுடன், பள்ளியின் துணை முதல்வர் சித்ரா, பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன், அறிவியல் ஆசிரியர் கமலம், பொருளியல் ஆசிரியர் ஆனந்தி,நுாலகர் கருணாகரன் உடன் சென்றிருந்தனர். களப்பயணத்திற்கான நிதியை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை வழங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us