/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிடப்பில் போடப்பட்ட பதவி உயர்வு விரக்தியில் பட்டதாரி ஆசிரியர்கள்
/
கிடப்பில் போடப்பட்ட பதவி உயர்வு விரக்தியில் பட்டதாரி ஆசிரியர்கள்
கிடப்பில் போடப்பட்ட பதவி உயர்வு விரக்தியில் பட்டதாரி ஆசிரியர்கள்
கிடப்பில் போடப்பட்ட பதவி உயர்வு விரக்தியில் பட்டதாரி ஆசிரியர்கள்
ADDED : ஜன 17, 2025 05:51 AM
புதுச்சேரி: பல மாதங்களாக பதவி உயர்வு கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பட்டதாரி ஆசிரியர்கள் விரத்தியில் உள்ளனர்.
புதுச்சேரி கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் பணி புரிந்தால், அடுத்த கட்ட பதவி உயர்வுக்கு நகர வேண்டும்.
பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருந்தனர். தற்போது பதவி உயர்வு கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் 28 ம் தேதி துறை ரீதியான பதவி உயர்வு கமிட்டி கூடி, 35 பட்டதாரி ஆசிரியர்களின் தலைமையாசிரியர் கிரேடு-2 பதவி உயர்வு சம்பந்தமாக முடிவு எடுத்தது. உடனடியாக 15 பேருக்கு பதவி உயர்வு கொடுக்க வாய்ப்பு இருந்தும், கமிட்டியின் முடிவு செயல்படுத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் விரத்தியை ஏற்படுத்தியுள்ளது.
மனக் குமுறலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், 'தலைமையாசிரியர் கிரேடு-2 பதவி உயர்வு கிடைத்தால், புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்குள், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட வேண்டும்.
பதவி உயர்வு பட்டியலில் சார்பு செயலர் மனைவி ஒருவர் இடம் பெற்றுள்ளார். பதவி உயர்வு கிடைக்கும்போது, அவரும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். இதற்காகவே, 15 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.