/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 01, 2025 04:10 AM

புதுச்சேரி: மூலகுளம் ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரியில் 5 வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி ஆண்டு விழா, ஈஸ்ட் கோஸ்ட் அலைடு சயின்ஸ் கல்லுாரி முதலாவது ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
கல்லுாரி நிறுவனர் முருகேசன், தாளாளர் ஜாய்ஸ் வர்க்கீஸ், துணை நிறுவனர் சத்தியவேணி முருகேசன், பதிவாளர் விஜயன், மருத்துவமனை இயக்குநர்கள் வெங்கட்ராம், ராஜன், செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெயகவுரி சுபாஷ், அலைடு சயின்ஸ் கல்லுாரி முதல்வர் வேணுவேந்தன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினரான புதுச்சேரி இந்திய மருத்துவ தேசிய ஆணைய இயக்குனர் ரங்கநாத் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து கல்லுாரி ஆண்டு விழாவில் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.