/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ராக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 22, 2025 03:40 AM

புதுச்சேரி: பெரம்பை ராக் கலைக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு ராக் கல்வி குழும அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜனாப் முகமது பரூக் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அன்வர் பாஷா வரவேற்றார்.துணை தலைவர் முகமது சையது, பொறுப்பாளர்கள் முகமது யூனுஸ், முகமது இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி துணை முதல்வர் செந்தில்நாதன் அறிமுக உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராகபங்கேற்ற அண்ணாமலை பல்கலை., பதிவாளர் பிரகாஷ் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, பேசினார்.
விழாவில், ராக் கல்வி குழும நிறுவன செயலாளர் ஹரிதேவன், செயலாளர்கள் ராகவேந்திரன், சரவணன், ரவிக்குமார் இயக்குநர் ரவிச்சந்திரன், பேராசிரியர்கள் அருண், குணாளன், ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.