/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.எம்.வி., பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
எஸ்.எம்.வி., பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜூன் 14, 2025 10:38 PM

புதுச்சேரி : மதகடிப்பட்டில் உள்ளமணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் ஓர் அங்கமான, எஸ்.எம்.வி., பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்குப் பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் வரவேற்றார்.பள்ளியின் இணை செயலர் ஆர்க்கிடெக் வேலாயுதம், கே.ஜி., வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்,பரிசு பெட்டகம் வழங்கி, பேசுகையில், 'இது ஒரு சிறப்பான நிகழ்வாகும். இதன் மூலம் மழலையர் வகுப்பிலிருந்து முன்னேற்றம் அடைந்த குழந்தைகளை அங்கீகரிக்கும் ஒரு விழாவாகவும், அடுத்த வகுப்பு படிப்புக்கு அவர்கள் தயாராவதற்கு ஒரு மனமகிழ் பாலமாகவும் அமைகிறது' என்றார்.
தொடர்ந்து மழலையர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், துணை முதல்வர்,நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.