/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நிரந்தர அரசாணை வெளியிடாததை கண்டித்து கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

ADDED : நவ 06, 2025 05:34 AM
புதுச்சேரி: பணி நிரந்தர அரசாணை வெளியிடாததை கண்டித்து, தொடர் போராட்டம் நடத்தப் போவதாக கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்க தலைவர் காத்தவராயன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2011ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உள்ளாட்சித் துறையால் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.பணி நிரந்தரம் செய்ய நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த பணி நிரந்தரத்திற்கான கோப்பு தயார் செய்து, அனைத்து துறைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது. இறுதியாக கவர்னர் ஒப்புதல் பெற்று ஓராண்டாகியும் பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை வழங்கப்படவில்லை.
ஏழாவது ஊதியக்குழுவின் 33 மாத நிலுவைத் தொகை, தினக்கூலி, கிராமப் பஞ்சாயத்து ஊழியர்களை தவிர்த்து நிரந்தர ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், குடும்ப ஓய்வு ஊழியர்கள் போன்ற பிரிவுகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் தினக்கூலி கிராம பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 33 மாத நிலுவை தொகை வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், பணி நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி, வரும் 10, 11 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம், 12ம் தேதி ஒரு நாள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.