நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : குடியரசு தினத்தை முன்னிட்டு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
குருவிநத்தம் கிராம சபை கூட்டத்தில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் தலைமை தாங்கினார். செயலாக்க அலுவலர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சி துறை கண்காணிப்பாளர் கல்யாணி பங்கேற்றார்.
கூட்டத்தில், குருவிநத்தம் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று, கழிவு நீர் வடிகால் வாய்க்கால், குடிநீர் பற்றாக்குறை, புதிதாக உருவான குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை, குடிநீர், தெருமின் விளக்கு, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

