/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராம சபை கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
/
கிராம சபை கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
ADDED : மே 02, 2025 04:52 AM

திருக்கனுார்: மே தினத்தை முன்னிட்டு திருக்கனுாரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மே தினத்தை முன்னிட்டு 18 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. திருக்கனுாரில் நடந்த கூட்டத்திற்கு ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தரையில் அமர்ந்தபடி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதில், சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். தெருமின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.
பின்னர், அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், தங்களின் அனைத்து கோரிக்கைகளையும், நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொகுதியின் வளர்ச்சி பணிகளை வேகமாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களும் விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.