ADDED : செப் 27, 2025 02:41 AM
அரியாங்குப்பம் : காந்திஜெயந்தியையொட்டி, அரியாங்குப்பத்தில் உள்ள 14 பஞ்சாயத்துக்களில் வரும் 2ம் தேதி, கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திக்குறிப்பு:
காந்திஜெயந்தியை முன்னிட்டு, வரும் 2ம் தேதி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.
அதே போல, கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட, பி.சி.பி., நகர் சமுதாய நலக்கூடம், ஆர்.கே., நகர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில், மணவெளி கிராம பஞ்சாயத்து, புருேஷாத்தமன் சமுதாய நலக்கூடம், நல்லவாடு சமுதாய நலக்கூடம் எதிரில், டி.என்.பாளையம் சமுதாய நலக்கூடம் ஆகிய 14 பஞ்சாயத்துக்களில் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.
கிராமத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.